உறங்கு வதுபோலுஞ் சாக்காடு

Rajagopalan
Rajagopalan
from Trichy
11 years ago
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

   உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.   வள்ளுவர் சாக்காடு என்னும் இறப்பையும் பிறப்பையும்,   உறக்கம் மற்றும்  விழிப்பு   நிலைகளோடு  ஏன் ஒப்பிடுகிறார் ! இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மானிடர்க்கும்  உறக்கம் மற்றும்  விழிப்பு ஒரேயொரு  முறை மட்டும் வருவதில்லை. மீண்டும் மீண்டும்  உறக்கம் மீண்டும் மீண்டும் விழிப்பு என்று  மாறி மாறி  வந்து கொண்டேஇருக்கும் . அதுபோல இறப்பும்  பிறப்பும்  இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும்( மானிடவர்க்கம்  உள்பட) மாறி மாறி  வந்து கொண்டேஇருக்கும். இப்பிறவி சூழலில்  இருந்து விடுபட பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்   " உறக்கத்திலும் விழிப்பிலும்  முறைமை வகிப்பவனுடைய யோகம்  துன்பத்தை (பிறவி சூழலை) துடைப்பதாகிறது"  என்னும் வழிமுறையை  உபதேசிக்கிறார்.அத்தகைய  யோகம் சத்குருவின் அருளால்  சித்திக்கின் துரியநிலை என்னும் அரியநிலையை அடைந்து சாக்காடு செல்லாத வீடுபேறு அடையலாம்  என்னும் பொருள் பட வள்ளுவர் முடிக்கிறார். சாய்ராம்  

LockSign in to reply to this thread